இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் திரைமொழி ஆளுமைக்குச் சான்று.உண்மைக் கதாபாத்திரங்களுக்கிடையே தன் கற்பனைக் கதாபாத்திரங்களை உலவவிட்டதன் மூலம் இதனை அவர் சாத்தியப்படுத்தியிருப்பார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கதை அம்சத்துடன் எடுக்கப்பட்ட படம் தான் டைட்டானிக்.
எத்தனையோ ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் உலக மக்கள் அனைவரின் இதயங்களில் ஒரு அழியா இடம் பிடித்த ஒரே படம் டைட்டானிக் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை . அந்த படத்தை உருவாக்கி உலகத்தின் அத்தனை உயரிய விருதுகளையும் , வரலாற்று சுவடுகளில் இன்னும் வசூழில் முதல் இடத்தை பிடித்துக்கொண்டு இருக்கும் ஒரே திரைப்படம் டைட்டானிக் என்ற பெருமைக்கு சொந்தக்காரருமான ஜேம்ஸ் கேமரூன் என்பது தான்.
டைட்டானிக் திரைப்படம் உலகெங்கும் சுமார் 1.8 பில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்தது.உலகம் முழுவதும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட டைட்டானிக் திரைப்படத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிவு அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதன் புதுப்பிக்கப்பட்ட முப்பரிமாண பதிவை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகிய நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது