திருச்சியில் வயிற்று வலிக்கு மெடிக்கலில் மருந்து சாப்பிட்ட 2 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த இரண்டரை மாத பச்சிளம் குழந்தை வயிற்று வலியால் துடித்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் தாய் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் தானாகவே மெடிக்கலில் குழந்தைக்கு வயிற்று வலிக்கு மருந்து வாங்கி கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டரை மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“ பொதுமக்கள் தவறான சிகிச்சை முறைகளை தாங்களே கையாள்வதும் உடல்நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வரும் முதியவர்கள் , பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் உரிய கல்வித்தகுதி இல்லாமல், முறையான பயிற்சி பெறாமல் தவறான சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
உரிய அங்கீகாரம் இல்லாமால் தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அதன் காரணமாக நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
மேலும் இதுபோன்று மருத்துவரின் ஆலோசனை இன்றி நோயாளிகளுக்கு மருந்துகளை தானாகவே வாங்கிக் கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.