Site icon ITamilTv

“போட்டது தடுப்பூசி.. அடித்தது ஜாக்பாட்..” – ஒரே இரவில் கோடீஸ்வரியான பெண்..!

Spread the love

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு பெண் 7.4 கோடி ரூபாய் பரிசு பெற்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெற்ற நபருக்கு, 7.4 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரட்டன், பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தடுப்பூசி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அரசு சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியை பொது மக்கள் செலுத்திக் கொள்ள ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுப் பொருட்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொண்டவர்களுக்கு, தி மில்லியன் டாலர் வேக்ஸ் அலையன்ஸ் என்ற பெயரில் ஒரு லாட்டரி போட்டி நடைபெற்றது.

இதில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெரும் நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.

இந்த லாட்டரி போட்டியின் வெற்றியாளராக 25 வயதான ஜோயன் ஸூ தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 7.4 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு பரிசாக வழங்கப்படும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள், நன்கொடை மற்றும் கம்பெனிகளிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளின் மூலம் தரப்பட்டவை. ஆஸ்திரேலிய மக்கள் அதிகளவில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் போட்டி தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version