சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி அவருடைய கணவர் தினேஷூடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து இருக்கும் நிலையில், இருவருக்கும் விரைவில் விவாகரத்து நடக்க போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இதனை தினேஷ் கூட சில பேட்டிகளில் கூறியுள்ளார். அதில், தங்களுடைய விவாகரத்து கேஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : பருப்பு உருண்டை குழம்பு.. சாதத்துக்கு கலக்கல் காமினேஷன்!!
இதனிடையே தற்போது ரச்சிதா பிரபல இயக்குனர் ஒருவரை திருமணம் செய்ய போகிறார் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.
தங்களுடைய திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்த தினேஷ் மற்றும் ரச்சிதா தம்பதிகளுக்கு இடையில் சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்போது இருவரும் பிரிந்து இருக்கின்றனர்.
கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா போட்டியாளராக இருக்கும்போது தினேஷ் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வந்தார்.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா தினேஷ் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து அண்மையில் முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்டரியாக அறிமுகமானார் தினேஷ்.
இந்த சீசனில் டைட்டில் வெற்றி பெற்று அதை ரச்சிதாவிடம் கொடுத்து நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்தார்.
ஆனால் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது வெளியில் நடிகை ரச்சிதா தன்னுடைய வெறுப்பை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தார்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் ரச்சிதா அவருடைய மனநிலையில் ஸ்ட்ராங்காக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இனி என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை பார்க்க போகிறேன் என்று வெளிப்படையாகவே பேசி இருந்தார்.
இதையும் படிங்க : கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை, இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த சூழலில் தான் தற்போது ரச்சிதாவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ரசித்தா மீண்டும் திருமணம் செய்வாரா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
இவர் இப்போது கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இணையத்தில் பரவி வரும் இந்த செய்தி குறித்து எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் இருக்கிறார்.
என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.