ITamilTv

“விவசாயிகள் போராட்டத்திற்குள் ‘சர்’ரென்று புகுந்த ஒன்றிய அமைச்சர் மகனின் கார்” – 2 பேர் பலி

Spread the love

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் கூட்டத்திற்குள் ஒன்றிய அமைச்சரின் மகனுடைய கார் வேகமாக மோதியதில் 2 விவசாயிகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

2 farmers killed by union minister's son car
2 farmers killed by union minister’s son car

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்  ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் கூட்டத்திற்குள் நடுவே புகுந்து வேகமாக மோதியதில் 2 விவசாயிகள் பலியாகினர்.

வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பெற வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

farmers protest against central farm laws

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விவசாயிகள் தேசம் தழுவிய பாரத பந்த்திற்கு  அழைப்பு விடுத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் போராட்டம் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்கள் ஆதரவளித்தனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் பிரதான கோரிக்கையான வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நடுவே ஒன்றிய அமைச்சரின் மகனுடைய கார் புகுந்து விவசாயிகள் பலியான சம்பவம் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

farmers killed car burned

இந்த நிலையில், விவசாயிகள் 2 பேர் பலியானதையடுத்து, உத்தரபிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியாவின் ஹெலிகாப்டரை கருப்புக் கொடி காட்டி ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி தரையிறங்க அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://twitter.com/Editor__Sanjay/status/1444618397539463170


Spread the love
Exit mobile version