அஞ்சாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஸ்ரீதர் (Anjathe) என்ற துணை நடிகர் மூச்சு திணறல் காரணமாக இரவு 1:30 மணிக்கு காலமானார்.
இவரது திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சாதே. நரேன் நாயகனாக நடித்த இந்த படத்தில் பிரசாந்த் வில்லனாக நடித்திருந்தார்.
மிகப்பெரிய வற்றி பெற்ற இந்தப் படம் இயக்குனர் மிஷ்கினின் கெரியரில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
இப்படத்தில் ஸ்ரீதர் (Anjathe) கால் ஊனமுற்றவராக நடித்திருப்பார். திரைப்படத்தில் தன் மகன் கண் முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் கதாபாத்திரத்தை மிக எதார்த்தமாக நடித்திருந்தார்.
சிறிய கதாபாத்திரம் என்றாலும் அவரின் கேரக்டருக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. இதுதவிர ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்திலும் ஸ்ரீதர் நடித்திருந்தார்.
கடந்த ஒரு வாரமாக இருமலால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீதர், இன்று அதிகலை 1.30 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். ஸ்ரீதரின் மறைவு தமிழ் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை படங்களில் நடித்து வந்த ஸ்ரீதர் புதிதாக திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது.
இயக்குனராகும் கனவுடன் இருந்த அவர் திடீரென மறைந்துள்ளது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதே போல் கடந்த மாதம் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க : Indian team announcement : 3வது டெஸ்ட் கிரிக்கெட்! -virat kohli விலகல்
இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது,திரை உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்ற, ஹிந்துஸ்தானி இசை கலைஞர் உஸ்தாத் ரஷித் கான் புற்றுநோய் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
கடந்த சில வருடங்களாக புரோஸ்டேட் புற்றுநோயால் அவதிப்பட்டு பாதிக்கப்பட்டு போராடி வந்த ரஷித் கான், கொல்கத்தாவில் உள்ள பீர்லெஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புக்கள் திரை உலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.