Gnanavel Raja : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண் திடீர் என தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக, தரமான படங்களை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவன தலைவர் KE ஞானவேல் ராஜா.
இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
இதையும் படிங்க : கென்யாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. 38 பேர் பலி!
அதை தொடர்ந்து, சிங்கம், நான் மஹான் அல்ல, பிரியாணி, பத்து தல போன்ற 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது சூர்யா நடிப்பில் பிரமாண்ட பட்ஜட்டில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தை தயாரித்துள்ளார் Gnanavel Raja.
இவரது வீடு சென்னை தி.நகரில் உள்ளது. அங்கு மனைவி நேகா மற்றும் தன்னுடைய பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவருடைய வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண், திடீர் என தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் பணிப்பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.