ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கோஷ்புக் பட்டான் பகுதியில் மன்சூர் அகமது பங்ரூ என்ற ஒரு சர்பஞ்ச் வெள்ளிக்கிழமை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அவ்வப்போது அப்பகுதியில் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வடக்கு காஷ்மீரின் மாவட்டத்தின் க்ரீரி பகுதியில் உள்ள வாணிகம் பாலா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பாலா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.மேலும் பாதுகாப்புப் படையினருக்கும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதிலடி கொடுத்த பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது.
மேலும் கடந்த சில மாதங்களாக, காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பல என்கவுன்டர்கள் நடந்துள்ளன, இதில் பல பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் தளபதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், ஆக்செல் மீது திடீரென துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் மோப்ப நாய் படுகாயம் அடைந்து உயிரிழந்தது. பிரேத பரிசோதனை முடிவில், தலையில் 3 குண்டுகள் பாய்ந்திருந்ததும், கால் பகுதியில் 10 இடங்களில் காயங்களும் மற்றும் சிராய்ப்புகளும் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அதன் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி பாராமுல்லா மாவட்டத்தில், ராணுவ வீரர்கள் சூழ அதற்கு இன்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.