உஸ்பெகிஸ்தானில் காதலியை Impress செய்ய நினைத்து காதலன் எடுத்த முயற்சி அவரையே காவு வாங்கியசோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் காதலியை Impress செய்வதற்காக தான் பணியாற்றிய வன உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களின் குகைக்குள் சென்று வீடியோ எடுத்த இரிஸ்குலாவ் (44) என்ற ஊழியரை அங்குள்ள சிங்கங்கள் கடித்து குத்தறியுள்ளது.
இரவுப் பணியை முடித்து விட்டு அதிகாலையில் அவர் சிங்கங்களுடன் பேசுவது போல் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது 3 சிங்கங்கள் அவரை தாக்க தொடங்கியுள்ளன.
Also Read : பொங்கல் பாண்டியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்..!!
சிங்கங்களின் பிடியில் இருந்து தப்ப எவ்ளோவோ முயற்சித்தும் அவரால் முடியாமல் போயுள்ளது . இறுதியில் அவரே சிங்கங்களின் காலை உணவாக மாறியுள்ளார் .
காதலிக்காக இரிஸ்குலாவ் தன்னை தானே எடுத்த அவரின் இறுதி நிமிட வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.