கலைஞருக்கும்,அ.இ.அ.தி.முகவிலிருந்து தி.மு.கவில் வந்துசேர்ந்த ஒரு முக்கியப் புள்ளிக்கும் நடந்த உரையாடல் என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் டிவிட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 1980வது ஆண்டு இசை உலகின் ராஜா இளையராஜாவின் இசையில் “நிழல்கள்” என்கின்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
இந்த படத்தில் ஒலித்த “இது ஒரு பொன் மாலை பொழுது” என்கின்ற பாடலின் மூலம் தமிழ் திரை உலகில் கவிஞராகவும், பாடல் ஆசிரியராகவும் களமிறங்கியவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து.
எண்ணற்ற தமிழ் திரைப்பட பாடல்களையும், பல புத்தகங்களையும் கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள கவி பேரரசு வைரமுத்து, கடந்த 44 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பயணித்து வருகிறார்.
இந்த நிலையில் ,கலைஞருக்கும்,அ.இ.அ.தி.முகவிலிருந்து தி.மு.கவில் வந்துசேர்ந்த ஒரு முக்கியப் புள்ளிக்கும் நடந்த உரையாடல் என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் டிவிட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கலைஞருக்கும்,
அ.இ.அ.தி.முகவிலிருந்து
தி.மு.கவில் வந்துசேர்ந்த
ஒரு முக்கியப் புள்ளிக்கும்
நடந்த உரையாடல்
எனக்கு
வாய்மொழியாக வந்தது;
தயக்கத்தோடு
கலைஞரையே கேட்டு
உறுதி செய்தது
சொற்கள் மாறியிருக்கலாம்;
சொன்னபொருள் இதுதான்
‘வைரமுத்த
ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’
‘ஏன்? எதனால?’
இதையும் படிங்க: இளையராஜா – வைரமுத்து விவகாரம்; என்ட்ரியான ஏ.ஆர்.ரஹ்மான்
‘அவரு உங்களப்
புகழ்ந்து பேசுறாரே தவிர
ஜெயலலிதாவ எப்பவும்
திட்ட மாட்டேங்குறாரு’
(கலைஞர்
சிறு சிந்தனைக்குப் பிறகு)
‘நீ அங்க இருந்து
இங்க வந்திருக்க
அங்க இருந்தபோது
என்னத் திட்டுன;
இங்க இருந்து
அந்த அம்மாவத் திட்டுற
வைரமுத்து
எப்பவும் இடம் மாறல
ஜெயலலிதா வைரமுத்துக்கு
எதிரியும் இல்ல
அவரு தமிழுக்காக
நம்மகூட நிக்கிறாரு
இன்னொண்ணு
அவரு யாரையும் திட்டமாட்டாரு;
அது அவரு இயல்பு’
கோள் சொன்னவர்
குறுகிப்போனார்
இப்படித்தான்
கேடுகள்
ஈட்டி எறியும்போதெல்லாம்
கேடயமாவது சத்தியம் என்று குறிப்பிட்டுள்ளார்.