சபரிமலை விழா மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலம் கொல்லத்துக்கு முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைக் கொண்ட சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பண்டிகைக் காலங்களில் பயணிகள் சிரமம் இன்று பயணம் செய்ய சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கபடுவது வழக்கம். அந்த வகையில் சபரிமலை விழா மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயனிகளிடையே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலம் கொல்லத்துக்கு முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைக் கொண்ட சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன் படி சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 23ம் தேதி மாலை 3.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில், மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவில் ஜங்ஷன் நிலையத்தில் டிசம்பர் 24ம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
அதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 3, 10, 17, 24, 31 மற்றும் ஜனவரி 7, 10, 12, 14 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு கேரள மாநிலம் கொல்லம் சென்றடையும்.
கொல்லத்தில் இருந்து டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 11, 13, 16 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் வந்தடையும்.
நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில்கள் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.