ஆப்பிரிக்கா நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், உலக சுகாதார அமைப்பு உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.
குறிப்பாக காங்கோவில் அதிகமாக பரவும் வைரஸ் நோய்க்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் இல்லாததால், இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், ஆப்பிரிக்காவில் பரவி வரும் Mpox என்ற குரங்கு அம்மை குறித்து உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு இது பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
முதன் முதலாக 1958 ஆம் ஆண்டில் குரங்குகளில் “பாக்ஸ் போன்ற” நோய் பரவிய போது, விஞ்ஞானிகளால் குரங்கு அம்மை என்று அழைக்கப்படும் Mpox வைரஸ் அடையாளம் காணப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், இந்த வைரஸ் முதன்முறையாக உடலுறவு மூலம் பரவுவது உறுதி செய்யப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் இது பரவியது.
Mpox என்ற வைரஸ் பெரியம்மை போன்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், குளிர் மற்றும் உடல் வலி போன்ற லேசான அறிகுறிகள் காணப்படும்.
இதையும் படிங்க : தமிழ் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி விட்டது – அன்புமணி ராமதாஸ் பேட்டி!!
மிகவும் தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் ஏற்படலாம்.
2022 ஆம் ஆண்டில் உலகளவில் mpox பரவிய போது, ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் இருபாலின ஆண்கள் மூலமாக அதிக அளவில் பரவியது. அந்த சமயம் பல நாடுகளில் பரவிய mpox நோய்த்தொற்று தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் பயன்படுத்துவதன் மூலம் பெரும்பாலும் நிறுத்தப்பட்டது.
ஆனால் ஆப்பிரிக்காவில் எந்த தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் கிடைக்கவில்லை. எனினும் பெரியம்மை நோய்க்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடுவது உட்பட மருந்துகள் மூலமாக இந்த நோயை தடுக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தற்போது வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க தடுப்பூசி நன்கொடைகள் குறித்து நன்கொடையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிடமிருந்து சில நிதி உதவிகளைப் பெற்றுள்ளதாகவும் காங்கோ கூறியுள்ளது.
முன்னதாக WHO அதன் அவசர நிதியிலிருந்து 1.45 மில்லியன் டாலரை ஆபிரிக்காவில் mpox தடுப்பு நடவடிக்கைகளுக்கு கொடுத்துள்ளது. ஆனால் ஆப்பிரிக்காவில் பரவி வரும் இந்த நோயை ஒழிக்க 15 மில்லியன் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.