பிரதமர் மோடி தனது ஈகோவிற்காக நட்டு மக்களை சிக்கலில் மாட்டிவிடுகிறார் என்று காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வரும் 2024 ஆண்டு நாடாளுமன்ற தேத்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியாவின் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் அணிக்கு INDIA என பெயர் சூட்டிய பிறகு, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்ற சொல்லை பயன்படுத்த தொடங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த பெயர் மாற்ற முயற்சி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில்,பிரதமர் மோடி தனது ஈகோவிற்காக நட்டு மக்களை சிக்கலில் மாட்டிவிடுகிறார் என்று காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
இந்தியப் பெருங்கடல் முதல் பாரதப் பெருங்கடல் வரை ஒரே நேரத்தில் இவ்வளவு பெயர் மாற்றம் பிரதமர் செய்ய வேண்டும். பிரதமர் தன் ஈகோவுக்காக மக்களை சிக்கலில் விடுகிறார்.
அதானி ஊழல், மணிப்பூர் பிரச்சனை, இன்னும் பல பிரச்சனைகளை மறைக்கத்தான்.எப்பொழுதும் இந்தியா என்று அழைக்கப்படும் பாரதம், இந்தியாவின் பெயரை மட்டுமே அப்புறப்படுத்துவது ஒருவித வருத்தம். அடுத்ததாக இந்தியக் கொடியை முழு காவி நிறமாக மாற்ற, நடுவில் தாமரையை சின்னமாக நிரந்தரமாக வைக்க பாஜகவின் திட்டமா?
நடுவில் உள்ள வெள்ளை, கீழ் பச்சை, நடுவில் நீல சக்கரத்தை அப்புறப்படுத்துவது, அதுதான் பாஜகவின் திட்டமா?எனது பாரதத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் இன்னும் சில நாடுகள் இருந்தது.
ஐக்கிய பாரதம் ஒன்றாக இருந்தது. இப்போது அது எங்கே? இந்தியாவை மட்டும் பாரத் என்று பெயர் மாற்றுவது நியாயமா? அல்லது 2024 தேர்தலுக்காக இந்திய கூட்டணி பெயர் காரணமாக மாற்றப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.