33% மகளிர் இடஒதுக்கீடு என்பது புதிய பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான விளம்பரம் மட்டுமே இதை இப்போது எந்த வகையிலும் செயல்படுத்த முடியாது என காயத்ரி ரகுராம் (Gayatri Raghuram) விமர்சித்துள்ளார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. எனினும், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மசோதா நிறைவேறாமல் போனது.
இந்த நிலையில் ,பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் முதல் நிகழ்வாக, மகளிருக்கு சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து நடிகையும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது:
இப்போது 33% மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல், எல்லை நிர்ணயச் சட்டத்திற்குப் பிறகு, சட்ட மசோதாவை நிறைவேற்றுவது என்பது கண்துடைப்பாகும். இந்தத் தேர்தலில் இருந்து தப்புவதற்காகத் தான், சும்மா அறிவிக்கிறார்கள். இந்த மசோதா 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். ஆனால் பாஜக பல பெண் தலைவர்களை உருவாக்கவில்லை உண்மை. அது இன்னும் ஆண் ஆதிக்க சாந்தனி கட்சி. அதனால் பெண் தலைவர்கள் யாரும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. எனவே பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை அறிவிப்பது வெறும் கண்துடைப்பாகும்.
எல்லை நிர்ணயச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு (10 ஆண்டுகளுக்கு முன்பே), நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனைத்து மாநிலங்களிலும் பாஜக 33% பெண்களை வேட்பாளராக நிறுத்த முடியுமா?
இது புதிய பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான விளம்பரம் மட்டுமே. அந்த அவசர பாராளுமன்ற கூட்டத்திற்கு சாதனை என்று விளம்பரப்படுத்த தேவையில்லை. இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இப்போது எந்த வகையிலும் செயல்படுத்த முடியாது.
2014-ம் ஆண்டிலேயே பாஜக இந்த மசோதாவைக் கொண்டுவந்திருந்தால், இப்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் பெண்களுக்கு உண்மையான சமூக நீதி 2029 இல் மட்டுமே வரும். நீண்ட காத்திருப்பு. அது ஏமாற்றப்பட்ட உணர்வு என தெரிவித்துள்ளார்.