இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடயிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் 5, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது .
இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கெத்தாக கைப்பற்றியுள்ள இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது .
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள தரோபா மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்தியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது .
இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கயானாவில் உள்ள மைதானத்தில் நெற்றி இரவு நடைபெற்து . இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . ஒருபக்கம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும் மறுபக்கம் நிலைத்து நின்று ஆடிய நிகோலஸ் பூரன் 40 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இறுதியில் 18.5 ஓவரில் 8 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி . இதனால் இந்த தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடயிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தற்போது முன்னிலையில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இல்லை மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பணியுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம் .