முகத்தை பிரபல நடிகையை போல மாற்ற ஆசைப்பட்டு ரூ.4.7 கோடி ரூபாய் செய்து இறுதியில் மாடல் அழகிக்கு நேர்ந்த பரிதாப நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
தன்னுடைய முகத்தை ஒரு அமெரிக்கன் பிரபலத்தை போல மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து பல கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து 40-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டு தன் முகத்தையே மாற்றிய ஒரு மாடல் தற்போது தன்னுடைய முடிவால் தன் வாழ்க்கையை வருந்ததக்கதாக மாறிவிட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்.
மீண்டும் இலட்சக்கணக்கான பணம் செலவு செய்து பழைய நிலைக்கு தன் முகத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அவர்தான் மாடல் அழகியான ஜெனிஃபர் பேம்பிலோனா.
நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையில் வந்த செய்தியின் படி, ஜெனிபர் தன்னுடைய முகத்தை அமெரிக்க பிரபலமான கிம் காடாசியன் போல மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து 12 ஆண்டுகளில் 600k அமெரிக்க டாலர்கள் செலவு செய்து 40க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தன்னுடைய முகத்தை மாற்றிக் கொண்டார். முதலில் அது அவருக்கு சந்தோஷத்தையும் புகழையும் கொடுத்தாலும் பின்னால் அது அவருக்கு வருத்தத்தை கொடுக்க துவங்கியது.
எல்லோரும் அவரை காடாஷியன் என்று அழைக்க ஆரம்பித்துள்ளனர். அதுவே அவருக்கு எரிச்சலாகி நான் என் சொந்த வாழ்க்கையில் மாடலாக உள்ளேன், தொழில் முனைவோராக உள்ளேன். ஆனால் அதற்காகவெல்லாம் நான் அங்கீகரிக்கப்படாமல் இந்த முகத்திற்காக மட்டும் அங்கீகரிக்கப்படுவது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார்.
ஜெனிபர் தன்னுடைய 17-வது வயதில் தன் முதல் அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். நாட்கள் நகர நகர தன்னை ஒரு பிரபலம் போல மாற்றிக்கொள்வதை அவர் ஒரு அடிக்ஷனாக எடுத்துக் கொண்டார். பட் இம்ப்ளான்ட்ஸ் மற்றும் ஃபேட் ஊசிகள் உட்பட 3 ரைனோ பிளாஸ்டி அறுவை சிகிச்சைகள் மற்றும் அடிப்பகுதியில் எட்டு அறுவைசிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார் அவர். இவையெல்லாம் காடாசியனை போல தோற்றமளிப்பதற்காக அவர் மேற்கொண்ட 40 அறுவை சிகிச்சைகளில் உள்ளடங்கியதாகும்.
காடாசியனின் இரட்டையரை போல தோற்றமளிக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே சர்வதேச கவனத்தைப் பெற்றார் ஜெனிபர். தி போஸ்டிலும் கூட அவர் கௌரவிக்கப்பட்டார்.
வெகு சிறு காலத்திலேயே பல லட்சக்கணக்கான இன்ஸ்டாகிராம் பாலோவர்களை பெற்றார் ஜெனிபர். ஆனால் இது எதுவும் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை. இதை அவரே கூறும் போது, “நான் அறுவை சிகிச்சைகளுக்கு அடிமையாகி விட்டேன். ஏதோ சூப்பர் மார்க்கெட்டில் இருப்பது போல முகத்தில் ஃபில்லர்களை அப்பிக் கொண்டிருக்கிறேன். எந்த அளவு பேரும் புகழும் வந்ததோ அந்த அளவிற்கு பல்வேறு அறுவை சிகிச்சைகளும் செய்து கொண்டிருந்தேன். மேலும் கட்டுப்பாடு இல்லாமல் எல்லை மீறி விட்டேன். இதனால் என் வாழ்வில் பல்வேறு மோசமான நாட்களை நான் கடக்க வேண்டி இருந்தது” என்று அவர் கூறினார்.
தனக்கு பாடி டிஸ்மார்பியா உள்ளதை அறிந்து பல நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தன்னுடைய பழைய முகத்தோற்றத்திற்கு மாற விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். இறுதியில் இஸ்தான்புலில் உள்ள ஒரு மருத்துவரை அவர் கண்டடைந்தார். அந்த மருத்துவர் தன்னால் ஜெனிபரின் பழைய நிலைக்கு அவரை கொண்டு செல்ல முடியும் என்றும் உறுதி அளித்திருந்தார். இதற்காக ஜெனிபர் பலகட்ட அறுவை சிகிச்சைகளை மீண்டும் செய்ய வேண்டி இருந்தது. அது எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் செய்வதற்கு அவர் முடிவும் செய்தார்.
சிகிச்சைக்கு முன்பாகவே அவர் எப்படி முகத்தோற்றம் உள்ளவராக மாறப் போகிறார் என்பதையும் கணினி மூலம் போட்டு காட்டி இருந்தனர் என்றும் அவர் கூறியிருந்தார். அறுவை சிகிச்சை அறைக்குள் செல்வதற்கு முன் தான் வேறு நபராக இருந்ததாகவும் அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வரும்போது ஏதோ புது பிறப்பு எடுத்தது போல புதிய நபராக வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
“டிடிரான்சிசன்” சிகிச்சைக்குப் பிறகு பல பக்க விளைவுகளும் அவருக்கு ஏற்பட்டது. குறிப்பாக மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கன்னங்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அதை பார்த்து அவர் பயந்து தான் இறந்து கொண்டிருப்பதாகவே நினைத்தாராம். மேலும் என் வாழ்க்கையை நான் என்ன செய்து விட்டேன் என்று வருத்தமும் பட்டாராம். இருப்பினும் இன்னும் இந்த சிகிச்சையின் கடைசி நிலை என்னவென்று தெரியவில்லை. இன்னும் பல கட்ட வலி மிகுந்த நாட்களை அவர் கடக்க நேரலாம்.
ஆனாலும் பிரேசிலியன் ஒருவர் ஜெனிபருக்கு இந்த கடுமையான நாட்கள் கண்டிப்பாக மதிப்பு வாய்ந்தது என்று தெரியும் என்று கூறினார்.