ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது இரட்டை குழந்தைகளுடன் நயன்-விக்கி ஜோடி எடுத்த க்யூட்டான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகின்றன
இந்திய சினிமாவில் இருக்கும் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வரும் இவர் தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை காதலித்து கரம்பிடித்தார்.
இதையடுத்து வாடகைத் தாய் மூலம் அழகிய இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்ட நயன்-விக்கி குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாக அறிவித்தனர் .
குழந்தை பிறந்து 10 மாதங்கள் ஆன நிலையிலும் ஒரு சில காரணங்களுக்காக இதுவரை குழந்தையின் முகத்தை காட்டாமலே பொத்தி பொத்தி வளர்த்து வருகின்றனர் . இன்ஸ்டா பக்கத்தில் அதிகம் ஆக்டிவாக விக்னேஷ் சிவம் தான் பதிவிடும் புகைப்படங்களில் கூட குழந்தையின் முகத்தை மறைத்தபடி தான் பதிவிடுகிறார்.
இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி தங்களது மகன்களுடன் முதல் ஓணம் பண்டிகையை சிம்பிளாக கொண்டாடி உள்ளனர். இந்த அழகிய தருணத்தை பக்காவாக போட்டோ எடுத்து ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன்.
பதிவிட்டுள்ளார்.
இந்த க்யூட்டான புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வந்துகொண்டிருக்கிறது.