‘கருடன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் சூரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
விடுதலை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிகர் சூரிஅறிமுகமானார். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து அவருக்கு ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்போது அவர் நடிப்பில் கருடன் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி நாயகனாக நடிக்க அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
கருடன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதால் பாக்ஸ் ஆபிஸில் அப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் முதல் வாரம் முடிவில் கருடன் திரைப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டி உள்ளது.
இதையும் படிங்க: நாயகனாக மாபெரும் வெற்றி – திரையரங்குகளில் வெற்றிநடை போடும் கருடன் திரைப்படம்..!!
கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் மொத்தமாக கூட இந்த வசூலை குவிக்காத நிலையில், சூரியின் படம் முதல் வாரத்திலேயே 30 கோடி வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது.
இந்த நிலையில் ‘கருடன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் சூரி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த நிலையில் ‘கருடன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் சூரி வீடியோ வெளியிட்டுள்ளார்.