திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநரும், தெலங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதி உள்ளிட்ட சந்ததிகளுக்கு சென்று சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் மாரியப்பன் உள்ளிட்டோர் பெருமாள் புகைப்படத்தை நினைவுப்பரிசாக வழங்கினர்.

இதன் பின்னர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்றார். அங்கு கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் வரவேற்பு அளித்தார். கோயிலில் ஜம்புகேஸ்வரர் சன்னதி, அகிலாண்டேஸ்வரி சன்னதிகளிகள் தரிசனம் செய்த பின்னர் அங்கிருந்து ஆளுநர் புறப்பட்டு சென்றார்.