அதிமுக, எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை என்று அதிமுக I.T. Wing கடுமையாக விமர்சித்துள்ளது.
எஸ்.பி.வேலுமணி பேச்சு:
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து பேசியிருந்தார். அதில், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்திருந்தால் நிச்சயம் 30 முதல் 35 தொகுதிகளை வென்றிருப்போம்.
தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் தமிழக பாஜக தலைவர்களாக இருந்த போது அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் போதுதான் அதிமுக- பாஜக கூட்டணிக்குள் முறிவு ஏற்பட்டுவிட்டது என பேசியிருந்தார்.
இதையும் படிங்க: கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள்- அண்ணாமலை
அண்ணாமலை பதிலடி:
இந்த நிலையில் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எஸ்.பி.வேலுமணி குறித்த பேச்சுக்கு பதிலளித்தார்.
அதிமுக தனியாக இருக்கும் போதே ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. கூட்டணி அமைத்திருந்தால் மட்டும் எஸ்.பி. வேலுமணி சொல்வதை போல் எப்படி 35 இடங்களில் அதிமுக வென்றிருக்க முடியும்.
எடப்பாடி பழனிசாமி- வேலுமணி இடையே உள்கட்சி பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. அதிமுகவை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்பது தேர்தல் தரும் பாடமாக உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.
அண்ணாமலை பேச்சுக்கு அதிமுக ஐடி விங் கண்டனம்:
இது குறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அஇஅதிமுக குறித்தோ, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குறித்தோ, அண்ணன் SP வேலுமணிஅவர்கள் குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை.
தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல்@AIADMKOfficial பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக்கொள்ளட்டும்!ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அஇஅதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது என்று பதிவிட்டுள்ளது.