இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று இரவு வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்துள்ளது .
இந்தியாவின் பெருமைமிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின் தனது அடுத்த இலக்கான சூரியனை ஆய்வு செய்ய ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி தீவிர ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி சில சிறிய ரக செயற்கைகோளகையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நேற்று இரவு 9.58 மணிக்கு PSLV-C60 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைப்பதன் முன்னோட்ட திட்டத்துக்காக பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஸ்பேடெக்ஸ் திட்டத்திற்கான Chaser, Target ஆகிய இரண்டு விண்கலங்களும் வெற்றிகரமாக பிரிந்தது.
நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும் இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது .