MLA who slapped the voter : ஆந்திராவில் வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்ற எம்.எல்.ஏ. ஒருவர் அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளரை கன்னத்தில் அறைந்த நிலையில், அந்த வாக்காளர் எம்.எல்.ஏ.வை திரும்ப அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024 : முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி 21 மாநிலங்களில் நடந்து முடிந்தது.
தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்தல் 13 மாநிலங்களில் ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதியும் நடந்தது.
இதையும் படிங்க : தாம்பரம்-கொச்சுவேலி.. கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்!
இந்நிலையில், இன்று மே 13ஆம் தேதி நான்காம் கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடிகளில் இன்று காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திரா தெனாலி தொகுதியில் வாக்களிக்க வரிசையில் செல்லாமல், நேரடியாக வாக்குசாவடிக்குள் சென்ற எம்.எல்.ஏ.விடம் வாக்காளர் ஒருவர் வரிசையில் வருமாறு கூறினார்.
அப்போது அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எம்.எல்.ஏ. அந்த வாக்காளரை கன்னத்தில் அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாக்காளர் எம்.எல்.ஏ.வை திருப்பி அடித்தார் (MLA who slapped the voter).
உடனே அங்கிருந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ.வை அறைந்த வாக்காளர் மீது, சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இதனால் அந்த வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
குறிப்பு : அடுத்தகட்டமாக ஐந்தாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்டத் தேர்தல் 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.