வரும் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரரான மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்த நாளை முன்னிட்டும், 61வது குருபூஜை வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிலையில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு வரும் 30-ஆம் தேதி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா நாளை வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.