தெலுங்கானா மாநில விவகாரப் பொறுப்பாளர் தருண்சுக் முன்னிலையில் பிரபல நடிகையும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜெயசுதா பாஜகவில் இணைந்தார்.இதனை தொடர்ந்து,தெலுங்கானா பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி உள்ளிட்டோரும் ஜெயசுதாவுடன் இருந்தனர்.
பின்னர் பேசிய ஜெயசுதா பிரதமர் மோடியின் முன்னேற்றத்தை பார்த்து தான் பாஜகவில் இணைவதாக ஜெயசுதா கூறினார். ஒரு வருடமாக மாநில பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருந்த அவர், இறுதியாக இன்று பாஜகவில் இணைந்தார்.
இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கும் குழுவின் தலைவர் எட்டல ராஜேந்தர் சமீபத்தில் அவரை சந்தித்து கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். பாஜகவில் இணைய வேண்டுமானால் சில நிபந்தனைகளுக்கு பாஜக கட்டுப்பட வேண்டும்.
அப்படி இருந்தால் மட்டுமே இணைவேன் என்று ஜெயசுதா கூறி இருந்ததாகவும், மேலிடத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. அதன் பிறகு பாஜக மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டியை சந்தித்து கலந்துரையாடினார்.
ஜெயசுதா அரசியல் வாழ்க்கை:
2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதன் பிறகு,2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் (டிடிபி) நடிகை ஜெயசுதா சேர்ந்தார். இதன் பின் அந்த கட்சியில் இருந்து விலகி 2019-ம் ஆண்டு தேர்தலின் போது ஒய்எஸ்ஆர்சிபி (யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ் கட்சி) கட்சியில் சேர்ந்தார்.இந்த நிலையில், தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் முன்னிலையில் அக்கட்சியில் நடிகை ஜெயசுதா சேர்ந்துள்ளார்.