ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி கீழே விழுந்த ரயில் நிலைய அதிகாரி ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பீகார் மாநில கதிஹர் மாவட்டத்திலுள்ள சல்மாரி ரயில் நிலையத்தில் அதிகாரியாகியாக பணியாற்றி வந்தவர் அப்பாஷ் நாராயணன் கான்.
இவர் நேற்று வழக்கமாக தன்னுடைய பணியை செய்வதற்கு ரயில் நிலையம் வந்துள்ளார்.
அதிகாலை 5 மணியளவில் கதிஹர் ரயில் நிலையத்துக்கு நியூ ஜல்பைகுரி – அமிர்தசரஸ் ரயில் வந்துள்ளது. இது மேற்கு வங்காளத்தில் இருந்து பஞ்சாப் வரை செல்லும் தொடர் வண்டியாகும். சரியாக நாராயணன் கான் பிளாட்ஃபாரமை அடைந்த போது அந்த ரயில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது.
அதை பிடிப்பதற்காக வேகமாக ஓடி வந்து ரயிலில் ஏறிய போது, நாராயணன் கான் கால் இடறி தண்டவாளத்திற்குள் விழுந்தார். இதில் ரயிலின் சக்கரம் அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் அதிகாரி அப்பாஷ் நாராயணன் கான் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
சிறிது தூரம் சக்கரத்தில் மாட்டி இழுத்துச் சென்ற உடல், காவல்துறை வருகைக்கு பிறகு மீட்கப்பட்டது. அவர்கள் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.