இந்தியாவின் மிகப்பெரிய தமிழ் நட்சத்திரங்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மாஸ் நடிப்பால் பல தசாப்தங்களாக பார்வையாளர்களை மகிழ்வித்து வருபவர்.
அந்த வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘லால் சலாமில்’ அவரது கேமியோ மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றார்.
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற படக்குழுவின் அறிவிப்பின்படி தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
ட்ரைலரில் ஃபகத் பாசில், ராணா ரகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து தூள் கிளப்பியுள்ளனர்.
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் எஸ்பி அஜித் ஐபிஎஸ் வேடத்தில் நடித்துள்ளார். இது அவரது 170வது படம்.
முன்னதாக, வேட்டையன் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிலையில், செப்டெம்பர் 30ஆம் தேதில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து டிரைலர் தள்ளிப்போவதாக செய்திகள் வெளியாகின.
இருப்பினும், படக்குழு அறிவித்தபடியே இன்று மாலை 5 மணிக்கு வேட்டையன் டிரெய்லர் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. மேலும், சன்டிவியில் பிரீமியரிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.