VigneshShivan – Nayan Divorce Rumors : கடந்த சில நாட்களாகவே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே பிரச்சனை என்றும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் தகவல் பரவி வரும் நிலையில், உண்மையில் என்ன நடந்தது? என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இதனாலேயே இவரைச் சுற்றி சர்ச்சைகள் இருந்த வண்ணமே உள்ளது.
பொதுவாகவே, எந்த ஒரு திரை பிரபலமும் ‘ஹச்’ என தும்பினால் கூட அதை ஊதி பெரிதாக்கி விடுகின்றனர், நெட்டிசன்கள். அதேபோல தான் தற்போதும் நடந்துள்ளது.
சரி..விஷயம் என்னவென்று பார்க்கலாம்.. VigneshShivan – Nayan Divorce Rumors
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.
தொடர்ந்து கிட்டதட்ட 7 ஆண்டுகள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ஆன கையோடு வாடகைத் தாய் முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த போதும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் நயன்தாரா. இப்படி எப்போதும் சர்ச்சை, சலசலப்பு என ஹாட் டாப்பிக்காகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே பிரச்சனை என்றும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்கு காரணம், வினேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கும் படத்தில் இருந்து சம்பளப் பிரச்சனை காரணமாக நயன் விலகியதால் தான் வினேஷ் சிவன், நயன்தாராவை அன்ஃபாலோ செய்துவிட்டார் என நெட்டிசன்கள் கதை கட்டி விட்டனர்.

மேலும், நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் இல்லாததும், அந்த சமயத்தில் நயன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட umm.. i’m lost! என்ற புதிரான பதிவும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனிடையே தற்போது இருவரும் சேர்ந்து பயணம் செய்யும் போட்டோக்களை பதிவிட்டு இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுபுள்ளி வைத்துள்ளார் நயன்தாரா.

மேலும், இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக தான் நயன்தாராவின் பக்கத்தில் சிலருடைய ஃபாலோயர்கள் பெயர் காண்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த தொழில்நுட்ப பிரச்சினை சரியானதால் தற்போது நயன்தாராவின் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், இத்துணூண்டு பாலோக்காக 10 வருட காதல் ஜோடியை விவாகரத்து வரை நெட்டிசன்கள் இழுத்து சென்ற வதந்தி ரொம்ப டூ மச்…