உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியனான ஆக்னஸ் கெலெட்டி இன்று காலமாகி உள்ளார்.
உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியனாக அறியப்பட்ட ஹங்கேரியை சேர்ந்த ஆக்னஸ் கெலெட்டி தனது 103வது வயதில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார்.
உலகில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் அனைவர்க்கும் ஒருமுறையாவது ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற லட்சம் இருக்கும் . அவ்வாறு தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் ஒலிம்பிக் தொடரில் ஜிம்னாஸ்டிக்கில் 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவர் தான் ஆக்னஸ் கெலெட்டி.
Also Read : அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை..!!
உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியனாக அறியப்பட்ட இவர் வரும் 9ம் தேதி தனது 104வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி உள்ளார்.
இந்நிலையில் ஆக்னஸ் கெலெட்டின் மறைவுக்கு தற்போது விளையாட்டு வீரர்கள் உள்பட பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.