திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தினம் தோறும் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக விசேஷ நாட்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே காணாமப்படும் இதன்காரணமாக பக்தர்கள் மணிக்கணக்கில் நின்று சாமி தரிசனம் செய்வர்.
Also Read : சூர்யாவின் RETRO படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!
இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் பெற குவிந்த பக்தர்கள்; ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்துள்ளார் .
கீழே விழுந்தவர்கள் மேலே எழுவதற்குள் அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றதாக கூறப்படுகிறது கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் ஏற்பட்ட இந்த விபத்தில் சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 34 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.