சபரிமலையில் ஐந்து நாட்கள் நடக்கும் கார்க்கிடக மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை ஜூலை 16ம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு கோயில் கருவறையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
மாதாந்திர பூஜை நாட்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையில் எந்த தடையும் இருக்காது என்றும் பக்தர்கள் தங்கள் இடங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் அல்லது நிலக்கல் யாத்ரீகர் போக்குவரத்து முகாம் அலுவலகத்தில் உள்ள ஸ்பாட் புக்கிங் கவுன்டர்களில் வழங்கப்பட்ட பாஸ்களை பெறலாம்.
இதனை தொடர்ந்து கோவிலில் ஜூலை 17-ம் தேதி கலபாபிஷேகம் நடைபெறும் என்றும் அதன் ஒரு பகுதியாக மகாகணபதி ஹோமத்திற்குப் பிறகு காலை 6.30 மணிக்கு மேல்சாந்தி முன்னிலையில் உள்ள மண்டபத்தில் தந்திரி பிரம்மகலச பூஜை செய்வார்.
தந்திரி தலைமையில் பிரம்மகலசம் ஏந்தி ஸ்ரீகோவிலை வலம் வந்த பிறகு உச்ச பூஜையின் போது ஐயப்பன் சிலைக்கு களப்பாபிஷேகத்துடன் விழா நிறைவடையும். உதயாஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம், படிபூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவையும் முதல் நாள் நடைபெறும் .
இதனை தொடர்ந்து ஜூலை 21-ம் தேதி உச்ச பூஜையின் போது சிலைக்கு கலசாபிஷேகத்துடன் சடங்குகள் நிறைவடையும். மேலும் கோயில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.