Boat capsize accident in Odisha : ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தில் மகாநதி ஆறு உள்ளது. இங்கு அரசு அனுமதியுடன் படகு சேவை செய்யப்பட்டு வருகிறது.
இங்குள்ள சில படகுகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும், பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை எனவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில்,
நேற்று மாலை 7 மணி அளவில் ஒரே படகில் மகாநதி ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் படகு கவிழ்ந்து ஆற்றில் விழுந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கர்சியா பகுதியைச் சேர்ந்த சுமார் 50 பேர், ஒடிசாவின் மாவட்டத்தில் உள்ள பதர்செனி குடாவில் உள்ள கோவிலுக்குச் சென்றனர். தரிசனம் முடிந்து 50 பேரும் படகில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க : வைகை தடுப்பணை… ஆற்றுச் சுழலில் சிக்கி இருவர் உயிரிழந்த சோகம்..!
மகாநதி ஆற்றில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அவர்கள் 48 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். நேற்று மீட்புப் பணியின் போது 35 வயது பெண் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
மேலும் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயமாகி இருந்ததால் மீட்புப் பணியினை விரயமாக்க புவனேஸ்வரில் இருந்து ஸ்கூபா நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டது.
படகில் அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி அதிக பயணிகளை ஏற்றி சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயா கோயால் தெரிவித்துள்ளார் Boat capsize accident in Odisha.
இந்நிலையில் அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கப்பட்டன.
இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 7 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகள் -வீரமணி!