பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில், புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (01.06.23) அன்று பள்ளிகள் திறக்கப்படும் (school opening) என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகம் மற்றும் புதுவையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால், வெப்ப அலை நீடிப்பதால், பள்ளிகள் முன்னதாக அறிவித்தபடி ஜீன் 1ல் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.
அதையடுத்து, வெயிலின் தாக்கத்தினால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் (school opening) என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெயில் காரணமாக தமிழகத்திலும் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.