Deve Gowda-முன்னாள் பிரதமர் தேவகவுடா பாரத ரத்னா விருதை சர்ச்சையாக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி மாநிலங்களவையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் நானும் எனது மனைவியும் கலந்து கொண்டோம்.
லட்சக்கணக்கான இந்தியர்களைப் போன்ற உணர்ச்சி தருணம் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியையும் பக்தியையும் அளித்தது.
அயோத்தி ராமர் நமது இதயங்களிலும் மனங்களிலும் நிறைந்திருக்கிறார். நமது முன்னோர்களும் மூத்தவர்களும் ராமரின் உருவம் நமது மனங்களில் நிரந்தரமாக இருக்கும்படி செய்துள்ளார்கள்.
இதையும் படிங்க: Fishersman Issue-”மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் DMK Protest..”-எங்கே,எப்போது?
ராமர் நேர்மையின்; பணிவின் வடிவம். தர்மத்தையும் ராஜ தர்மத்தையும் பின்பற்றியவர். அனைவரையும் தன்னோடு இணைத்துக்கெண்டவர் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் , மகாத்மா காந்தியை வழிநடத்தியது ராமரின் நற்பண்புகள் தான் . நமது நாட்டின் நற்பண்புகளின் அடையாளமாக ராமர் விளங்குவதாக கூறியவர் மகாத்மா காந்தி.
அப்படி பகவான் ராமர் மற்றும் அவரது தெய்வீகத்தின் மூலம் நமது நாடு இணைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் அடித்தளமாக அவர் இருக்கிறார் என்று தெரிவித்தார்.
மேலும் நமது நாட்டின் மற்றும் உலகின் அடையாளமாக அயோத்தி ராமர் கோயில் திகழ வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
மற்றொரு விஷயம் என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது. அது, ராமர் கோயில் பிராண பிரதிஷ்டைக்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்தது.
இந்த விழாவுக்காக அவர் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ”திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரம்..” திண்டுக்கல் ஐ லியோனி!
அண்மையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கிய பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர்,
முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் விருது வழங்குவதில் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.
இது குறித்து பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா(Deve Gowda) “மிக உயர்ந்த தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது என்ற மிக முக்கிய முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார்.
அதில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்த முயல வேண்டாம் என மக்களவையில் கேட்டுக்கொண்டுள்ளார்.