கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயாகாந்த்க்கு அனைத்து (Full Power) அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது
தேமுதிகவுக்கு கேப்டன் விஜயகாந்த் இல்லாத முதல் தேர்தல் என்பதால், சரிவில் இருந்து சமாளித்து
மாநிலக் கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெரும் முனைப்பில் வலுவான கூட்டணியில் இணைய தேமுதிக திட்டம் திட்டியதாக கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்த தேமுதிக, வரும் நாடாளுமன்ற தேர்தலில்
அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது
➛ கள்ளக்குறிச்சி, விருதுநகர் உட்பட தேமுதிகவுக்கு வாக்கு வங்கி உள்ள செல்வாக்கு மிக்க 7 தொகுதிகளை தேர்வு செய்துள்ள தேமுதிக, குறைந்தது 4 மக்களவைத் தொகுதிகளும், 1 ராஜ்யசபா பதவியும் அளிக்கும் கூட்டணியில் இடம்பெற தேமுதிக முனைப்பு காட்டியுள்ளது .
இந்நிலையில் இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் (Full Power) வழங்கி தீர்மானம்
விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு, அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்
விஜயகாந்துக்கு மாவட்டம் தோறும் சிலை நிறுவ மற்றும் விஜயகாந்த் நினைவிடத்தில் தினந்தோறும் அன்னதானம் உதவிகள் செய்ய அறக்கட்டளை உருவாக்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் விஜயகாந்த் புகழை எடுத்துரைக்கும் வகையில் ஊர்தோறும் கூட்டங்கள் நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/shocking-news-about-vetri-duraisamy/
கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயாகாந்த்க்கு முழு அதிகாரம் உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்
கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பிரேமலதா தெரிவித்துள்ளார்.