இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளைத் தொடங்க இந்திய அரசின் நிபந்தனைகளை எலன் மஸ்க்கின் Starlink நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவைகளைத் தொடங்க அரசின் உரிமத்தைப் பெறுவதற்கு இந்திய அரசு விதித்த முக்கிய நிபந்தனைகளை உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கின் Starlink நிறுவனம் முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
பயனர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்கவும் தேசிய பாதுகாப்புகளுக்கு தேவைப்படும்போது புலனாய்வு அமைப்புகளுக்கு Starlink-ன் அணுகலை வழங்கவும் அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இதையடுத்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), செயற்கைக்கோள் சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணய கட்டமைப்பை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது
எல்லாம் சரியாக நடைபெற்றால் இந்தாண்டு இறுதிக்குள் செயற்கைக்கோள் இணைய சேவைகள் இந்தியாவில் வெற்றிகரமாக தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதியேற்றுள்ள நிலையில் பல புதிய அறிவிப்புகளை அவர் அறிவித்து வருகிறார் . மேலும் நட்பு நாடுகளாக இருந்தாலும் சில விதிமுறைகளையும் அவர் தெரிவித்து வருகிறார்.
இதேபோல் டிரம்ப்பின முக்கிய ஆதரவாளராக விளங்கும் எலன் மஸ்க்கின் இந்தியாவில் தனது நிறுவனத்தின் கிளைகளை வளர்க்க ஆர்வம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.