இந்தியாவில் கொரோனாவுக்கு (corona) சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 22,742 லிருந்து 21,406 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று 1,331 பேருக்கு கொரோனா (corona) தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 2,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,49,72,800 லிருந்து 4,49,74,909 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.
இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,707 லிருந்து 5,31,722 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3,430 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,21,781 ஆக உயர்ந்து உள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,742 லிருந்து 21,406 ஆக குறைந்து உள்ளது.