வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டாவை நோக்கி நகர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் சில மணிநேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 26 இன்று மதியம் மாலை வேதாரண்யத்திற்கு தென் கிழக்கே 500 கிலோமீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலமாக இருந்துகொண்டு தமிழ்நாடு முழுவதும் மழை தொடக்கும் அதே நேரத்தில் கடலோர மாவட்டங்கள் திருவள்ளூர் முதல் தூத்துக்குடி வரை வரையும் உள்ளே சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை வரை தொடர் கன, மிக கனமழையை கொடுக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மேலும் விழுப்புரம் முதல் இராமநாதபுரம் வரை இடைப்பட்ட புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொடர் மிக கனமழையை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதிகபட்ச எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய பகுதிகளான நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் வழியாக உள் மாவட்ட வெள்ள நீர் வடிய வேண்டும் என்பதாலும், இந்த மாவட்டங்களில் 4 நாள்கள் தொடர் கனமழை, மிக கன, அதிக கன மழை பொழிவு இருக்கும் என்பதால் மேற்கண்ட மாவட்டங்களில் கடும் முன் எச்சரிக்கை தேவைப்படுகிறது. குறிப்பாக கடலூர் முதல் புதுக்கோட்டை வரை உள்ள மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் கடும் வெள்ளம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : November 26 Gold Rate : தங்கம் விலை… இன்றைய நிலவரம்?
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கன மழை, அதாவது, 21 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலுார், அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை அதாவது, 12 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்பகுதிகளுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 600 கிமீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக கூறபடுகிறது.
மேலும் டெல்டா மாவட்டங்களை நோக்கி அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதாக கூறியிருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. புயல் குறித்த அச்சம் தேவையில்லை என்று வானிலை நிபுணர்கள் கூறினாலும் மழை குறித்து எச்சரிக்கையோடு இருக்குமாறும், பாதுகாப்போடு இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். அவசர கால உதவிக்கு 1077 என்ற எண்ணை தமிழக அரசு ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.