கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ந்தேதி அன்று அதிகாலை 2 மணி மற்றும் 4.30 மணிக்கு முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் ஏற்பட்ட 2 பெரும் நிலச்சரிவுகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதியில் இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலம் வழியாக நடந்து சென்ற பிரதமர் மோடி பேரிடர் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர்குலைய ஆரம்பித்துள்ளது – அண்ணாமலை பேட்டி!!
அதன் பின்னர், நிலச்சரிவு தொடர்பாக வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது..
“வயநாடு நிலச்சரிவு ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகளை சிதைத்து விட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் ஒவ்வொரு மீட்பு பணிகளையும் கண்காணித்து வருகிறேன்.
நிலச்சரிவு பாதிப்புகளை தொடர்ந்து கேரள அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.
இப்படி ஒரு பேரிடர் சாதாரணமானது அல்ல. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்திற்கு நாம்தான் பொறுப்பு. கேரளாவிற்கு தேவையான உதவிகள் விரைவில் வழங்கப்படும்.” என்று கூறினார்.