18 வயதுடைய மாற்றுத்திறனாளி மகனை ஆடைகள் இன்றி கொட்டகையில் பூட்டி வைத்த பெற்றோர்.. சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா மேதொட்டி பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தம்பதிகளின் ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறனாளி ஆன 18 வயது மகனை ஆடைகள் இன்றி வீட்டின் வெளியில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்திருப்பதாக காவல் நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் புகார் அளித்துள்ளார்.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வெளிமட்டம் பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டு ஆடைகளை கொடுத்து முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சிறுவனை வெளியே அழைத்துச் செல்ல முடியாத காரணத்தாலும், சிறுவனை வேறு யாரிடமும் ஒப்படைக்க முடியாத காரணத்தினாலும் சிறுவனை வீட்டின் வெளியே உள்ள கொட்டகையில் பூட்டி வைத்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுவனை வேறு இடத்தில் பாதுகாப்பாக வைக்க தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கான முயற்சியை பஞ்சாயத்து மேற்கொள்ளும் என்றும் பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.