அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றத்தை பெறுவதற்காக அம்பேத்கர் தனது இறுதி காலம் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தார். சாதி அளித்தொழித்தல் புத்தரும் அவர் தமிழர்களும் இந்தியாவில் சாதிகள் சூத்திர காரர்கள் யார் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்த நிலையில் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது 125 அடி உயர சிலையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகராவ் தொடங்கி வைத்தார்.
இந்த மிக உயர சிலை தெலங்கானா மாநிலத்தின் மற்றுமொரு அடையாளமாக இருக்கும்.அம்பேத்கரின் உயரமான சிலை, புத்தர் சிலைக்கு எதிரே உள்ள செயலகத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. 146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு 11.4 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும்.
இந்தச் சிலையானது, 20,000 சதுர அடி பரப்பளவில், 20,000 சதுர அடி பரப்பளவில் ஒரு அருங்காட்சியகம், நூலகம் மற்றும் ஆடியோ காட்சி கூடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத்தை ஒத்த வட்ட வடிவ கட்டிடத்தைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்துக் முதலமைச்சர் அலுவலக அதிகாரி கூறுகையில், சிலை 474 டன் எடை கொண்டது. இதில் 360 டன் உள்புற சிலையை அமைக்க ஸ்டெயின்லஸ் ஸ்டீல் அமைக்கப்பட்டது. பின்னர் மேற்புறத்தில் 114 டன் வெண்கல முலாம் பூசப்பட்டது என தெரிவிதுள்ளார்.