தமிழக வீராங்கனைகள் 3 பேர் உள்பட 32 பேருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது . விளையாட்டு துறையின் உயரிய விருதுகளாக பார்க்கப்படும் இந்த விருதுகளை பெறுபவர்களுக்கு ஏராளமான சலுகைகளுக்கும் கிடைக்கபெறும்.
அந்தவகையில் நடப்பாண்டுக்கான கேல் ரத்னா விருது உலக செஸ் சாம்பியன் குகேஷ் உள்பட 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : உள்நாட்டு விமான சேவையில் Wi-Fi – அசத்தும் ஏர் இந்தியா..!!
உலக செஸ் சாம்பியன் குகேஷ், பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற மனு பாக்கர், ஹாக்கி வீரர் ஹர்மன் ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் போன்றோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ, மனிஷா உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பப்பட்டுள்ளது.
டெல்லியில் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் மாபெரும் அரசு விழாவில் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதினை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது .